ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை-வனத்துறை எச்சரிக்கை

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் -கர்நாடகம்  மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் சுற்றி திரிந்தது.

காட்டு யானை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் வாகனத்தை நிறுத்தினர். சுமார் அரை மணி நேரம் காட்டு யானை சாலையில் அங்கும் இங்கும் நடமாடியதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை யானை வனப் பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: