×

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் 97 சதவீதத்தை பிடித்தது ரஷ்யா: ஓரிரு நாட்களில் எஞ்சிய பகுதிகளும் தன்வசமாகும் என அறிவிப்பு

கீவ்: கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீத நிலப்பரப்பை தன்வசப்படுத்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் மரியுபோல் நகரின் கடைசி கோட்டையாக இருந்த உருக்காலை வீழ்ந்துவிட்டது. கட்டட இடிபாடுகளில் இருந்து உக்ரைன் படை வீரர்களின் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காண்பதற்காக தலைநகர் கீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உக்ரைனின் மற்றொரு நகரமான கெர்சனும் ரஷ்யா வசமாகியுள்ளது. கெர்சனை ரஷ்யாவுடன் இணைத்து கொள்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நகரத்தில் ரஷ்ய கரன்சியான ரூபிளை புழக்கத்தில் விடவும் ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 97 சதவீத நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் எஞ்சிய பகுதிகளும் தன்வசமாகும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே  ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து நகரங்களை மீட்க உக்ரைன் படைகள் போராடி வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து இதுவரை 31 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறினார். கிழக்கு உக்ரைனில் செமிரோ, டோனட்ஸ், லிஸி சான்ஸ் நகரங்களின் பெரும் பகுதிகள் ரஷ்ய படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியா நகரையும் கைப்பற்ற ரஷ்ய படைகள் குறிவைத்து முன்னேறி வருகின்றன. இதனால் அங்கு வசிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பீதியடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.


Tags : Russia ,Ukraine ,Luhansk , Ukraine, Luhansk, 97%, Russia
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி