×

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட 61 பேர் ரஷ்யாவில் நுழைய தடை: அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி..!!

மாஸ்கோ: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட 61 பேருக்கு ரஷ்யா அதிரடியாக பயண தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னணி பாதுகாப்பு மற்றும் ஊடக நிர்வாகிகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யா, அவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது எனவும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தடை பட்டியலில் பாதுகாப்பு நிறுவனங்கள், ஊடக தளங்கள், தர மதிப்பீட்டு நிறுவனங்கள், விமானம், கப்பல் கட்டும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளனர்.

அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட், வர்த்தக பிரதிநிதி கேத்ரின் மற்றும் தடைகள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் ஜேம்ஸ் ஓப்ரையன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க செனட்டர்கள், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அரசு உயரதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ராணுவ பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 61 பேர்கள் ரஷ்யாவின் தடை பட்டியலில் உள்ளன.


Tags : Russia ,President Vladimir Putin , US Congressmen, dignitaries, Russia
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...