ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியில்  இரத்தின வினாயகர் கோயில் வளாகம் உள்ளது. இதில்  ஸ்ரீதேவி பூமாதேவி சமேத நிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், நீலாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீபத்மாவதி தாயார், ஸ்ரீஆண்டாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், பால் முனீஸ்வரர் வைணவ என சன்னதிகள் திருப்பணி, கொடிமரம் மற்றும் விமான கோபுரங்களின்  சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.

மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை நைமித்திக ஆராதனம், ஆச்சார்யாவரணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், புண்ணியாக வாசனம், பகவத் பிரார்த்தனை, மேதினி ஆராதனம், பாலிகை பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், கும்ப ஆவாகனம், உக்தஹோமம், பூர்ணாஹுதி, மங்களஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள்  நடைபெற்றது. இதனையடுத்து, நேற்று னிவாச பெருமாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக  நடைப்பெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழு தலைவர் ஷண்முகநாதன், துணை செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் பார்த்திபன், பொருளாளர் தியாகராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Related Stories: