தாமரைப்பாக்கம் பகுதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு தாமரைப்பாக்கத்தில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி தலைமை வகித்தார். இதில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் டி.பாஸ்கர், வி.ஜெ.சீனிவாசன், எல்லாபுரம் குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். ஒன்றிய நிர்வாகிகள் பி.ஜி.முனுசாமி, ஜி.பாஸ்கர், ஆர்.லோகநாதன், கே.ஜி.அன்பு, இ.சுப்பிரமணி, வி.நாகலிங்கம், உமா சீனிவாசன், வி.ஸ்ரீதர், நாராயணசாமி, ஏ.சுப்பிரமணி, ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், `திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு பல்ேவறு  திட்டங்களை அறிவித்து வருகிறது’ என்றார். பின்னர் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார். இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திமுக தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, திமுக ஒன்றியச் செயலாளர்கள் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், டி.எத்திராஜ், ஆர்.எஸ்.ராஜராஜன், பொன்விமல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ப.ச.கமலேஷ், ஆயிலச்சேரி ரகு, ராஜி, ஜெகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இளைஞரணி அமைப்பாளர் கே.என்.சரத்குமார் நன்றி கூறினார்.

Related Stories: