×

பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்யவேண்டும்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:திருத்தணி தொகுதிக்குட்பட்ட உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தரவேண்டும். பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு உலக வங்கி நிதி உதவி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும். தொகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



Tags : S. Chandran ,MLA , S. Chandran MLA petitions Collector to inspect quarries endangered by public
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்