ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: கம்போடியா அணியுடன் இந்தியா இன்று மோதல்

கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில், இந்தியா - கம்போடியா அணிகள் இன்று மோதுகின்றன.ஆசிய கோப்பை  கால்பந்து தொடர் 2023  இறுதியில் அல்லது 2024 தொடக்கத்தில் சீனாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் விளையாடும் அணிகளை தேர்வு செய்வதற்கான 3வது மற்றும் கடைசி  தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.முதல்  தகுதிச் சுற்றில் ஆசிய அளவில் 35 முதல் 46வது ரேங்க் வரையிலான நாடுகள்மோதின. 2வது தகுதிச் சுற்றில் 1-34 ரேங்க் நாடுகள் மோதின. அதில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது. மொத்தம் 17 அணிகள் ஆசிய கோப்பைக்கு  முன்னேறியுள்ளன. எஞ்சிய இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்ய 3வது தகுதிச் சுற்றில் இந்தியா உள்பட 24 நாடுகள்  6 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இந்தியா இடம் பெற்றுள்ள டி பிரிவில்  ஆப்கானிஸ்தான், கம்போடியா, ஹாங்காங் அணிகள் உள்ளன. முதலிடம் பிடிக்கும் அணி ஆசிய கோப்பையில் விளையாட தகுதிப் பெறும். இந்நிலையில் முதல்  ஆட்டத்தில்  இந்தியா-கம்போடியா அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி வெற்றி முனைப்புடன் களமிறங்குகிறது. உலக தரவரிசையில்  இந்தியா 106வது இடத்திலும்,  கம்போடியா 171வது இடத்திலும் உள்ளன.

Related Stories: