×

அரசு மருத்துவர்கள் கிளினிக் வைக்க தடை

திருமலை: தெலங்கானாவில் அரசு மருத்துவர்கள் இனி தனியாக கிளினிக் வைக்க கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில அரசு, அரசு மருத்துவர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும், கிளினிக் மருத்துவம் பார்க்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவர்கள் இனி தனிப்பட்ட முறையில் மருத்துவ சேவை செய்யக் கூடாது என்று சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக அரசு மருத்துவர்களாக பணியில் சேருபவர்கள் இனி தனிப்பட்ட முறையில் மருத்துவம் செய்ய முடியாது என தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும், ஏற்கனவே பணியில் உள்ள மருத்துவர்கள் தனிப்பட்ட பயிற்சியில் ஈடுபடலாம். அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Tags : Government , Government bans doctors from keeping clinics
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...