×

உள்ளாடை விளம்பரத்துக்கு சமந்தா ஆபாச ‘போஸ்’

சென்னை: உள்ளாடை விளம்பரத்துக்காக ஆபாச ‘போஸ்’ தந்திருக்கிறார் சமந்தா. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.நாக சைதன்யாவை பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடித்திருந்தார் சமந்தா. தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெண்களின் உள்ளாடைகளை தயாரிக்கும் நிறுவனத்துக்காக விளம்பரம் செய்ய புகைப்படம் ஒன்றை சமந்தா வெளியிட்டு இருந்தார். அதில் உள்ளாடை அணிந்தபடி ‘போஸ்’ தரும் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்துக்கு 24 மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகள் கிடைத்தன. நடிகைகள் அனுஷ்கா சர்மா, ஹன்சிகா, சம்யுக்தா ஹெக்டே, ருஹானி சர்மா, லட்சுமி மன்ச்சு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் கமென்ட் செய்திருந்தனர். அதே சமயம், திருமணம் முறிந்த பிறகு சமந்தா ஆபாசமாக காட்சி தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags : Samantha , Samantha Porn 'Pose' For Underwear Advertising
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்