நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் படகு சவாரிக்கு தடை

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 7ம் தேதி (நேற்று) காலை 6 மணி நிலவரப்படி சுமார் 16,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ,  படகு சவாரி செய்யவோதடை விதிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: