×

ரூ5 கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை ரூ5 கோடியாக உயர்த்தியுள்ளார்.தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, நயன்தாரா. ரூ8 கோடி வரை இவர் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் சமந்தா இருந்தார். அவரது சம்பளம் ரூ4 கோடி. ஆனால் இப்போது வேகமாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் பூஜா ஹெக்டே. விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்தியில் சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீவாலி, ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் பான் இந்தியா படத்துக்காக பூஜா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிக்கத்தான் அவருக்கு ரூ5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த படம் 5 மொழிகளில் உருவாகிறது. அதனாலேயே பூஜாவுக்கு பெரிய சம்பளம் தரப்படுகிறது. மேலும் அவரது மார்க்கெட் வேல்யூபடிதான் சம்பளம் பற்றி ஒப்பந்தம் ஆகியுள்ளது என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Pooja Hegde , Pooja Hegde earning a salary of Rs 5 crore
× RELATED சமந்தா வாய்ப்பை பறித்தார் பூஜா ஹெக்டே