×

அனிருத்தை திருமணம் செய்ய விரும்பும் பாடகி

சென்னை: அனிருத்தை திருமணம் செய்ய விரும்புவதாக பாடகி ஜோனிடா காந்தி கூறியிருக்கிறார்.இசையமைப்பாளர் அனிருத், அவ்வப்போது நடிகைகள், பாடகிகள் என பலருடன் கிசு கிசுக்கப்பட்டவர். அனிருத்தும் ஆண்ட்ரியாவும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சில வருடங்களுக்கு முன் வைரலானது. இந்நிலையில் அவர்கள் காதலித்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் அனிருத்தின் பெயர் அடிபட்டது. இதற்கிடையில் அனிருத், பாடகி ஜோனிடா காந்தியை காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. அனிருத் இசையில் ஜோனிடா காந்தி பல பாடல்களை பாடியுள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘ஹலமதி ஹபீபோ’ பாடலையும் அனிருத்துடன் சேர்ந்து ஜோனிடா காந்தி பாடியிருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோனிடா காந்தியிடம், நீங்கள் யாரை கொல்ல விரும்புவீர்கள், யாரை முத்தமிட விரும்புவீர்கள், யாரை மணக்க விரும்புவீர்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் உள்பட சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் மணக்க விரும்பும் நபர்களின் பெயரில் அனிருத்தை ஜோனிடா காந்தி தேர்வு செய்திருக்கிறார். இதையடுத்து இருவரும் காதலிப்பது உண்மைதான் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் பரவியுள்ளது.



Tags : Anirudh , Singer who wants to marry Anirudh
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்