நாளை மாமல்லபுரத்தில் டும் டும் டும்: நயன்தாரா திருமண விழா ஒளிபரப்பு ஓடிடிக்கு ரூ25 கோடிக்கு விற்பனை

சென்னை: மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாராவுடன் இந்து முறைப்படி நாளை திருமணம் நடக்கிறது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறினார்.முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், சில வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்கள் ‘நானும் ரவுடிதான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்தனர். மேலும், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்துள்ளனர். இருவரும் லிங் டுகெதர் பாணியில் சென்னையிலுள்ள ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, வரும் 9ம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன், திருமணம் நடக்கிறது. ந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் கூறியதாவது:

சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் இருக்கிறேன். நயன்தாரா நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். எங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அதற்கு நன்றி. தற்போது நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். சென்னை மாமல்லபுரத்தில் வரும் 9ம் தேதி நயன்தாராவுக்கும், எனக்கும் இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். வரும் 11ம் தேதி நயன்தாராவும், நானும் மீடியாவை சந்தித்து, எங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார். நேற்று முன்தினம் நயன்தாராவுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி ஓடிடி தளத்துக்கு ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாகவும், திருமண நிகழ்ச்சிகளை இயக்குனர் கவுதம் மேனன் வடிவமைத்து இயக்குகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: