20 ஆண்டாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய குழு: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று அளித்த பேட்டி: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விடுதலையாக, சட்ட வல்லுநர்கள் குழு அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக மீது வைக்கும் ஊழல் புகார்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்து அண்ணாமலை கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: