பாஜ நிர்வாகிகளை தேச துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. தலைவர் பேட்டி

சென்னை: உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும்  தலைகுனிவை ஏற்படுத்திய பாஜ நிர்வாகிகளை தேசத்துரோக சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்களால், தங்கள் உயிரினும் மேலாக பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் முகமது நபி (ஸல்) குறித்த பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரின் இழிவான மற்றும் அருவருப்பான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. ஆகவே பாஜ நிர்வாகிகள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில துணை  தலைவர்கள் எஸ்.எம்.ரபீக் அகமது, அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள்  அச.உமர் பாரூக், அகமது நவவி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருதீன்,  மாநில செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா, பொருளாளர் அமீர் ஹம்சா  ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: