கருமுட்டை விற்பனை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: கருமுட்டை விற்பனை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பல ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப் பயன்படுத்தி, அதைத் தனியார் மருத்துவமனைகள் மூலம் விற்பனை செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளுக்கும் கருமுட்டை விற்றுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். இனியும் இதுபோல நிகழாமல் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: