×

கந்தர்வகோட்டை அருகே டூவீலரில் எரிசாராயம் வைத்திருந்தவர் கைது-100 லிட்டர் ஊறல் அழிப்பு

கறம்பக்குடி : கந்தர்வக்கோட்டை அருகே டூவீலரில் எரிசாராயம் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.கறம்பக்குடி அருகே வேளாடிபட்டி கிராமத்தில் உள்ள ஒத்தவீடு என்ற பகுதியில் சாராய ஊறல் மற்றும் நாட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வேளாடிபட்டி ஒத்தவீடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்ற வாலிபர் தனது டூவீலரில் விற்பனைக்காக வைத்திருந்த 3 லிட்டர் நாட்டு சாராயத்தையும், பதுக்கியிருந்த 100 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். பின்னர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கந்தர்வகோட்டை அருகே டூவீலரில் எரிசாராயம் வைத்திருந்தவர் கைது-100 லிட்டர் ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Gandharvakot ,Karambakudi ,Gandharvakkottai ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு