×

கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி: கடலாடி அருகே சின்னபொதிகுளம் கிராமத்தில் உள்ள மாணிக்கவள்ளி அம்மன், செல்வவிநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடந்தது. சின்னபொதிகுளம் முதல் வரை வேப்பங்குளம் 6 கிலோ மீட்டர் தூரம் பெரியமாடுகளுக்கு போட்டி நடந்தது. இதில் 10 ஜோடிகள் கலந்து கொண்டன.

இப்போட்டியில் மறவர்கரிசல்குளம் காளீஸ்வரி கருப்புத்துரை என்பவரது மாடுகள் முதலிடமும், புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாநல்லூர் ஹபீப்முகம்மது என்பவரின்  மாடுகள் இரண்டாம் இடமும்,சிவகங்கை மாவட்டம் உடுப்பன்பட்டி சின்னையா என்பவரது மாடுகள் மூன்றாம் இடமும், மேலச்செல்வனூர் வீரக்குடி முருகையானார் என்பவது மாடுகள் நான்காம் இடமும் பிடித்தன.

சின்ன மாடுகள் பந்தயத்தில் 19 ஜோடிகள் கலந்துகொண்டன. இதில் சத்திரக்குடி கல்லத்திரி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் என்பவரது மாடுகள் முதலிடமும், மதுரை மாவட்டம் வெள்ளாலபட்டி இளந்தேவன் என்பவரது மாடுகள் இரண்டாம் இடமும், புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாநல்லூர் ஹபீப் முகம்மது என்பவரது மாடுகள் மூன்றாம் இடமும், ராமநாதபுரம் இலந்தைகுளம் வீரமுனியசாமி என்பவரது மாடுகள் நான்காம் இடமும் பிடித்தன. முதல் நான்கு இடங்களை பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags : Double Cow Racing ,Temple Festival , Temple Festival, Double Cow Racing,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்