தாய்லாந்தில் ஆசிய வாலிபால் போட்டி; இந்திய அணியில் இடம் பிடித்த திருவாரூர் மாணவி.! கிராம மக்கள் மகிழ்ச்சி

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் எடமேலையூரை சேர்ந்தவர் அரசு. விவசாயி. மனைவி நளினி. இவர்களது மகள் விஷ்ணு (17). சிறுவயது முதலே வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், எடமேலையூர் விளையாட்டு கழகத்தில் இணைந்து தொடர் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் விளையாட்டு விடுதியில் தங்கி 11ம் வகுப்பு கல்வி பயின்று வருவதோடு வாலிபால் பயிற்சியும் பெற்று வருகிறார்.

இந்தநிலையில் 18 வயதுக்குட்பட்ட ஆசிய அளவிலான பெண்கள் வாலிபால் சாம்பியன் போட்டி தாய்லாந்தில் இன்று (7ம் தேதி) முதல் ஒருவாரம் நடக்கிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட அணியில் திருவாரூரை சேர்ந்த விஷ்ணு இடம் பெற்றுள்ளார். இதனால் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் வாலிபால் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: