பிரிந்து வாழும் கணவரிடம் இருந்து இழப்பீடு பெற்று தராததால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்-சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சித்தூர் :  பிரிந்து வாழும் கணவரிடம் இருந்து தனக்கும் குழந்தைகளுக்கும் இழப்பீடு பெற்று தராததால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மனு நீதி நாள் முகாமில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் மண்டலம் அகர மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னா(45). இவரது கணவர் வெங்கடேஷ். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், சின்னா தனது இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய கணவர் வெங்கடேஷிற்கு சொந்தமான சொத்துக்களை விற்று விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னா தனது கணவர் வெங்கடேஷிடம் சென்று எதற்காக சொத்துக்களை விற்றாய் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு, வெங்கடேஷ் கடந்த 14 ஆண்டுகளாக தன்னுடன் குடும்பம் நடத்தாததால், உனக்கும் எனது சொத்துக்கள் மீது எந்த ஒரு  அதிகாரமில்லை எனக்கூறி அவரை அடித்து விரட்டி  உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னா கங்காதர நெல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அதன் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.  

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னா சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் கலெக்டரிடம் கடந்த மூன்று மாதங்களாக 5 முறை மனு வழங்கியுள்ளார். அந்த மனுவில் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் சொந்தமான சொத்தை எனது கணவர் யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்துவிட்டார். இதனால் நாங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எனது கணவரிடம் இருந்து எனது குழந்தைகளுக்கும் எனக்கும் உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் மாவட்ட கலெக்டர் மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம்டைந்த  சின்னா நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்க விட்டு எனக்கு நியாயம் கிடைக்காததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்து, தான் மறைத்து வைத்திருந்த 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு கலெக்டர் அலுவலக வாசலுக்கு வெளியே வந்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்கை அளித்தனர்.

பின்னர், அவரை ஆட்டோவில் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு வழங்கியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் பெண் தூக்க மாத்திரை சாப்பிட்ட தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: