×

2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியல் வெளியீடு: தமிழ்நாடு முதலிடம்..!

புதுடெல்லி:  2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் , 2021-2022 -ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு உலக உணவு பாதுகாப்பு தினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இந்த பட்டியல் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது .இரண்டாவது இடத்தில் குஜராத் , 3வது இடத்தில் மகாராஷ்டிரா இடம்பெற்றுள்ளது. மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும்,மணிப்பூர்  இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் உள்ளது.


Tags : Tamil Nadu , Food Security Code List, Top of Tamil Nadu,`
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...