கந்தர்வகோட்டை பகுதியில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் விவசாயிகள் தற்சமயம் விவசாயத்தை மும்முரமாக செய்து வருகிறார்கள். இதில் ஒரு பகுதியாக மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.தற்சமயம் மிளகாய்செடி காய் காய்க்க தொடங்கி உள்ளது. மிளகாய் செடி வைத்ததில் இருந்து அறுபது நாட்களில் மிளகாய் காய் காய்க்க தொடங்கி விடும் என்றும், பச்சை மிளகாய் கிலோ ஒன்று தற்சமயம் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்றும், மிளகாயை செடியில் பழுக்கவிட்டால் குறைந்தபட்சம் பத்து கிலோ மிளகாய் பழம் காய்ந்தால் ஒரு கிலோ முதல் 1,200 கிராம் வரைதான் கிடைக்கும் என்றும், மிளகாய் பழுத்து விற்பதை விட பச்சையாக விற்பனை செய்து வந்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றும், இதேவேளை பச்சைமிளகாய் தேவை என்பது மக்களுக்கு குறைந்தபட்ச தேவையாக மட்டுமாகவே உள்ளது.

மிளகாய் செடி வைத்ததில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து மிளகாய் பழங்களை பழுக்க விட்டு பழங்களை காய வைத்து இருப்பில் வைத்துக் கொள்ளலாம் எனவும், பச்சைமிளகாய் சில தினங்களில் கெட்டு விடும் எனவும் தெரிவிக்கின்றனர். தற்சமயம் பச்சை மிளகாய் கிலோ ஒன்று 200 முதல் 220 வரை விற்பனையாகிறது என்று கூறுகிறார்கள். தற்சமயம் மிளகாய் விலை என்பது கூடுதலாக இருப்பதால் விளைச்சல் நன்றாக இருந்தால் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும் என கூறுகின்றனர்.

30.ஜோலார்பேட்டை அருகே அளவீடு செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் இலவச வீட்டு மனையில் மீதமுள்ள இடத்தை இல்லாதவர்களுக்கு கொடுக்க மக்கள் எதிர்ப்பு-திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ஏற்கனவே கொடுத்த இலவச வீட்டு மனையில் வீடு கட்டியது போக மீதமுள்ள இடத்தை அளந்து இல்லாதவர்களுக்கு கொடுப்பதற்காக அதிகாரிகள் நேற்று இடத்தை அளக்க சென்றதால் வாக்குவாதம் ஏற்பட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர்  ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த  2000ம் ஆண்டில் திமுகவின் ஆட்சியின் போது சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 சென்ட் அளவிலான இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 21ம் தேதி தமிழக முதல்வர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க  அரசுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை வருவாய் துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் இடங்களை அளந்து இலவச வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆர் நகர் பகுதிக்கு நேற்று வருவாய்த்துறையினர் வந்து காலி இடங்களை அளந்துள்ளனர். மேலும் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு 3 சென்ட் இடம் வழங்கியுள்ள நிலையில் அதே இடத்தில் வீடு கட்டிய இடம் போக மீதிகாலியாக உள்ள இடத்தையும் அதிகாரிகள் அளந்து வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டதால் அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொடுத்த இடத்தில் காலியிடங்களை அளக்கக்கூடாது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென வேட்டப்பட்டு- திருப்பத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி கணேசன் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் இது சம்பந்தமாக கலெக்டரிடம் முறையாக மனு அளிக்க வேண்டும் என தெரிவித்து பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். திடீரென பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்து பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: