×

கலைஞர் பிறந்தநாள் விழா பழநி அருகே ரேக்ளா பந்தயம்

பழநி : முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளையொட்டி பழநி அருகே கொழுமம்கொண்டான் கிராமத்தில் திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடந்தது.திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இதன்படி பழநி அருகே கொழுமங்கொண்டான் கிராமத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடந்தது.

உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர், திண்டுக்கல், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. குறைந்த நேரத்தில் எல்லையை கடக்கும் ரேக்ளா வண்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

எல்லையை கடக்க சீறிப்பாய்ந்த ரேக்ளா காளைகள் காண்பவரை பரவசம் அடையச் செய்தன. முதல் பரிசாக 2 பவுன் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக 1 பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Birthday Festival Ragla Racing ,Palani , Palani: DMK in the village of Colombo near Palani on the occasion of the birthday of the former Chief Minister artist
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை