×

பிரபல பாடகர் கே.கே.வின் மரணம் இயற்கையானது தான்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

மும்பை: பிரபல பாடகர் கே.கே.வின் மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது முழு விவரம் தெரியவந்துள்ளது. அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவமனை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்னும் கே.கே. கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியின் போது பங்கேற்று பாடினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

கே.கே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.  இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கேகேவின் இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது அவர் அதிக உற்சாகம் அடைந்ததால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : K. K. Wynn , Famous Singer KK, Death, Nature, Autopsy
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...