×

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம்

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்திய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய 5,000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டனர். அதில் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பணிநியமனம் செய்யப்பட்ட நிலையில், 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு மாத ஊதியமாக அரசு சார்பில் ரூ.7,500 வழங்கப்பட்டது. இந்தநிலையத்தில், கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக செவிலியர்களாக பணியாற்றி வருகிறோம். கொரோனா உட்பட பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் செவிலியர்களை பணிநிரந்தம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதியானது மறுக்கப்பட்டதால்,  இன்று காலை திடீரென 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை சார்பாக அவர்கள் கைது செய்ய முற்படும் பொழுது சாலை மறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். போராட்டம் நடத்திய செவிலியர்களின் கோரிக்கையானது, கடந்த 2015ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்த்தப்பட்ட எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும், அதற்கான உத்திரவாதத்தை அரசு சார்பாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags : Omanthurai Government Hospital , Omanthurai, Hospital del Gobierno, Enfermera Temporal, Permanencia, Lucha
× RELATED ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்...