எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் தென்காசியில் நின்று செல்லும்: மக்கள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசி மக்களின் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் தென்காசியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லாததை அடுத்து கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. மக்களின் போராட்டம் மக்கள் பிரதிநிதிகள் கடிதங்களை தொடர்ந்து தென்காசியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தென்காசியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகூர், வேளாங்கண்ணிக்கு கிடைக்கப்பட்ட முதல் சேவை இதுவாகும். மேலும் தென்காசி வழியாக இயக்கப்படும் 3 வாராந்திர கோடைகால சிறப்பு ரயில் இதுவாகும்.      

Related Stories: