விளம்பரத்துக்காக பிரியங்கா வாங்கிய ரூ1.45 லட்சம் உடை

லண்டன்: விளம்பர படத்தில் நடிப்பதற்காக ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள உடையை வாங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் டிவி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் லண்டன் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் அவர் நடித்தார். இதற்காக ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள கறுப்பு நிற மாடர்ன் உடையை அவர் வாங்கியிருக்கிறார். அதை அணிந்துதான் அந்த விளம்பர படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். இந்த விளம்பரத்துக்கு சாதாரண உடையே போதுமானது என விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த விளம்பரம் மூலம் தனக்கு மீண்டும் ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என பிரியங்கா நம்புகிறார். அதனால் இதற்காக அவர் பெரும் தொகை செலவிட்டு உடை வாங்கியிருக்கிறார்.

Related Stories: