பெருக்கரணை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க கட்டிடம்: உடனடியாக அகற்ற கோரிக்கை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் பெருக்கரணை கிராமத்தில் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. கடந்த 1997ம் ஆண்டு கட்டப்பட்ட இச்சங்க கட்டிடத்தில், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, அவர்களது கால்நடைகளில் இருந்து கிடைக்கும் பாலினை காலை மற்றும் மாலை வேளைகளில் கொள்முதல் செய்யப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலான இந்த கட்டிடம் முழுவதும் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மழைநீர் உள்ளே வடிந்து வரும் நிலையில் உள்ளது. இதனால் முக்கிய கோப்புகள், மழைநீரில் நனைந்து நாசமாகின்றன.மேலும், எந்த நேரத்திலும், இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பால் ஊற்ற வரும் வரும் மக்கள் கடும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.  இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே பகுதியில் புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.எனவே, எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதடைந்தள்ள பால் உற்பத்தி சங்க கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: