×

நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிப்போரை தடுக்க அரசு பாதுகாப்பு ஏற்பாடு வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளம்பெண்கள், 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அதேபோல் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் கதவை திறக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த 2 சம்பவங்களில் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிப்போரை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். மேலும் பெற்றோர்களும் பிள்ளைகளை கண்காணித்து நீர்நிலை பகுதிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

Tags : Government ,Vijayakanth , Government should arrange security to prevent bathers from realizing danger in water bodies: Vijayakanth insists
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...