மாதவரத்தில் ஜமாபந்தி

புழல்: சென்னை மாதவரம் வட்டத்துக்குட்பட்ட புத்தகரம், மாத்தூர், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதி மக்களுக்கு இன்றும், புழல், கதிர்வேடு, சூரப்பட்டு, விலக்கப்பட்டு, வடபெரும்பாக்கம், செட்டிமேடு ஆகிய பகுதி மக்களுக்கு  நாளையும் (8ம் தேதி) ஜமாபந்தி, புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு வட சென்னை வருவாய் கோட்டாட்சியர் தலைமை தாங்குகிறார். இதில், பொது மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம், என மாதவரம் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: