எம்டிசி ஊழியர்களுக்கு ஓய்வு அறை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

தாம்பரம்: தாம்பரம், கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில், மாநகர போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கு தினமும் ஓட்டுனர், நடத்துனர் என, ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்து செல்பவர்களுக்கு அங்கு சரியான ஓய்வு அறை, கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், அவர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்குகூட வசதி இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் தங்களுக்கு ஓய்வறை, கழிவறை போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.10.87 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஊழியர்கள் ஓய்வெடுக்கும் விதமாக ஓய்வறை, கழிவறை ஆகியவை கட்டப்பட்டது. இதனை நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ரிப்பன் வெட்டி போக்குவரத்து ஊழியர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

Related Stories: