கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் வழக்கு நாளை ஒத்திவைப்பு

புதுடெல்லி: சீனா விசா முறைகேட்டு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவின் விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாகரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பெற்றதாக கார்த்தி சிதம்பத்தின் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்a தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராகவும், சீனா விசா தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கேட்டும் கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி  பூனம்-ஏ-பாண்டே அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: