×

ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் குறைந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோடை விடுமுறை காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் 78,188 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35,427 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோயில் உண்டியலில் பக்தர்கள்ரூ.3.94 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதேபோல், வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

Tags : Ezhumalayan Temple , Devotees wait for 8 hours at the Ezhumalayan Temple for darshan
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...