×

பள்ளிகள் திறந்ததும் நல்லொழுக்க வகுப்பு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும். முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இதில், தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் என பலரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்து பாடம் எடுப்பார்கள். இதையடுத்து வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல் தேர்வை எழுத முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Mahesh , Virtue class after schools reopen: Minister Mahesh False Information
× RELATED தமிழகத்தில் உள்ள அனைத்து...