கும்மிடிப்பூண்டி பிடிஒ அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பிடிஓ அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 61 ஊராட்சி மன்ற தலைவர்கள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள் 100க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இருக்கின்றனர்.  அவர்கள் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தினந்தோறும் 100 நாள் வேலை திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தார்சாலை அமைத்தல், தரைப்பாலம், கழிவறை, தெருவிளக்கு, குடிநீர், நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், பொது சுகாதாரம், அரசுப் பள்ளி கட்டிடம் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, மனைவரைப்படம், ஆழ்துளை கிணறு அமைத்தல், மீன் வளர்ப்பு, அரசு சிமெண்ட், கம்பிகள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அலுவலகத்திற்கு வருகின்றனர். அப்போது அதிகாரிகளை பார்க்க வேண்டிய இருந்தால் பார்வையாளர்கள் இருக்கைகள் இல்லாமலும், குடிதண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அத்தோடு அலுவலகங்களில் உள்ளே ஆங்காங்கே இருசக்கர வாகனம், மேஜைகள், ரெக்கார்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. இதனை உடனடியாக சுத்தம் செய்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: