ஐவர் ஹாக்கி உலக கோப்பை: இந்தியா முதல் சாம்பியன்

லாசேன்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘ஐவர் ஹாக்கி உலக கோப்பை’ தொடரில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.லாசேன் நகரில் நடந்த இத்தொடரில் ஆண்கள், மகளிர் என 2 பிரிவுகளாக  போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளும், மகளிர் பிரிவில் இந்தியா, போலந்து, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, உருகுவே அணிகளும் விளையாடின.ஆண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்தது.  போலந்து  தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 2வது இடம் பிடித்தது. இதையடுத்து இரு அணிகளும் விறுவிறுப்பான பைனலில் மோதின.அதில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் வென்று முதலாவது ஐவர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய தரப்பில் தாமி பாபி, ரஹீல் முகமது தலா 2 கோல், குரிந்தர், சஞ்ஜெய் தலா ஒரு கோல் அடித்தனர்.

மகளிர் பிரிவு லீக் சுற்றில்  இந்தியா 1 வெற்றி,1 டிரா, 2 தோல்வியுடன் 3வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தது. இறுதிப் போட்டியில் உருகுவே 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), சரிதா அசலங்கா, துஷ்மந்த சமீரா, வனிந்து ஹசரங்கா, நுவனிடு பெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலகா, பிரவீன் ஜெயவிக்ரமா, சமிகா கருணரத்னே, லாகிரு மதுஷங்கா, ரமேஷ் மெண்டிஸ், குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, மதீஷா பதிரணா, பானுகா ராஜபக்ச, கசுன் ரஜிதா, லக்‌ஷன் சந்தகன், மஹீஷ் தீக்‌ஷனா, நுவன் துஷாரா.ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேடு.

Related Stories: