×

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக சுரேஷ், மாவட்ட செயலாளராக ஜீவா, பொருளாளராக கமலக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 4 துணைத்தலைவர்கள், 4 துணை இணை செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் இருவர், தணிக்கையாளர் ஒருவர், செயற்குழு உறுப்பினர்கள் 4 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கோட்டத்துக்கான தேர்தலில் பொன்னேரி கோட்ட தலைவர் சந்திரன், திருவள்ளூர் கோட்ட தலைவராக தர், திருத்தணி கோட்ட தலைவராக தெய்வசிகாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக தேர்வு செய்த அனைவருக்கும் நிறுவன தலைவர் சா.அருணன் சால்வை அணிவித்து சான்றிதழ்  வழங்கினார்.

‘’அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தவேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியமாக மாற்றி அவர்களை மேம்படுத்தவேண்டும்’ என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Tags : Teacher Welfare Federation , To implement the old pension scheme; Teacher Welfare Federation insistence
× RELATED 5, 8ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில்...