ரூபாய் நோட்டுகளில் எந்தவித மாற்றமுமில்லை: ரிசர்வ் வங்கி விளக்கம்

டெல்லி: இந்தியா ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி படம் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நேற்றில் இருந்த சமூக வலைத்தளங்களிலும் பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தி உருவத்துக்கு மாற்றாக அல்லது மகாத்மா காந்தி உருவத்தோடு சேர்த்து  ரவீந்தனாத் தாகூர், அப்துல் கலாம் உள்ளிட்டோரின் உருவங்களையும் பதிப்பதற்க்கு ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில்  முன்னாள் அதிபர்களான ஜோன் ஆபிரகாம், ஜான் எஃப் கென்னடி உள்ளிட்ட பல்வேறு அதிபர்கள் படங்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவிலும் அந்த நடவடிக்கை மேற்கொள்ள படலாம் எனவும் தகவல் வெளியாகி வந்தது. இந்த சூழ்நிலையில் தற்பொழுது விளக்கம் அளித்துள்ள ரிசர்வ்   வங்கின்னுடைய பொதுமேலாளர் யோகேஷ் தாயால் இதுபோல் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் தகவலில் எந்த விதமான உண்மை இல்லை.

அதுபோன்று எந்த விதமான பரிந்துரையும் ஆர்.பி. ஐ வசம் இல்லை. எனவே பழைய ரூபாய் நோட்டுகளில் எந்த விதமான மாற்றமும் இல்லை என தெரிவியுள்ளார்கள். ஏற்கனவே பல ஆண்டுகளாக மகாத்மா காந்தி உருவத்தை போல நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவத்தையும் பதிக்க வேண்டும் என அந்த கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் இருக்க கூடிய நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பதிலளித்த மத்திய அரசு மகாத்மா காந்தி உருவத்துக்கு பதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவத்தை பதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று பதில்லளித்தது. இதுபோன்ற சூழ்நிலையில் ரவீந்தனாத் தாகூர், அப்துல் கலாம் உள்ளிட்டோரின் படங்களை பொறிக்க திட்டம்மிட்டு வருவதக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பரபரப்புக்கு ரிசர்வ் வங்கி முற்று புள்ளி வைத்துள்ளது. பழைய ரூபாய் தாள்களில் அதுபோல எந்த வித மாற்றமும் இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Related Stories: