×

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்: இந்தியன் ரயில்வே அறிவிப்பு

டெல்லி: ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரிக்க உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு வசதியாக ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது. இதற்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம், ஆப் மூலம்  ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது, பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 ஆகவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : IRCTC , IRCTC, sitio web, reserva de boletos, cambio, ferrocarriles indios
× RELATED இணைய வழி பயணசீட்டை ரத்து செய்தால், ஒரு...