ஹரியானாவில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 நாய்கள் உயிரிழப்பு..!!

சண்டிகர்: ஹரியானாவில் முதல் முறையாக நாய்கள் கேனைன் வகை கொரோனா வைரசால் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதித்து வருகிறது. இந்நிலையில், கிஸாசர்சா, அரோதக், பதோபாபத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 நாய்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 15 நாய்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் வாந்தி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு பலவீனமாகி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஆகவே வயிற்றுப்போக்கால் அவதிப்படும் நாய்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும், அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கொரோனா பரவும் அச்சத்தால் கவலைகொள்ளத் தேவையில்லை. சாதாரண சுகாதார பழக்கங்களைப் பின்பற்றினாலே போதும் எளிதில் கொரோனா பாதிப்பை விரட்டிவிடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் அச்சத்தால் செல்லப் பிராணிகளை கைவிட வேண்டியதில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: