நேஷன்ஸ் லீக் கால்பந்து; சுவிட்சர்லாந்தை வீழ்த்திய போர்ச்சுக்கல்

லிஸ்பன்: ஐரோப்பிய கால்பந்து அணிகள் பங்கேற்கும் நேஷன்ஸ் லீக் 3வது சீசன் நடந்து வருகிறது. 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் 2 பிரிவில் போர்ச்சுக்கல்லின் லிஸ்பனில் இன்று நடந்த போட்டியில் போர்ச்சுக்கல் 4-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் (35 மற்றும் 39வது நிமிடம்) அடித்தார். அவர் போர்ச்சுக்கல் அணிக்காக இதுவரை 117 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். முதல் போட்டியில் ஸ்பெயினிடம் டிரா கண்டிருந்த போர்ச்சுக்கல் 2 போட்டி முடிவில் ஒரு வெற்றி, ஒரு டிரா என தனது பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. வரும் 10ம்தேதி கடைசி போட்டியில் செக் குடியரசுடன் மோத உள்ளது.

Related Stories: