சிவகாசியில் 10 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்ட கால்வாய்-மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

சிவகாசி : சிவகாசியில் கடந்த 10 ஆண்டுகளாக வாறுகாலில் தேங்கி நின்ற மண் அகற்றப்பட்டது.சிவகாசி மாநகராட்சி 34வது வார்டு பிகேஎஸ்ஏ சாலையில் உள்ள அம்மன்ேகாவில் பட்டி தெரு, வானக்கார தெரு, தங்கையா நாடார் தெரு வீடுகளின் கழிவுநீர் பிகேஎஸ்ஏ சாலையில் உள்ள வாறுகாலில் சென்று கிருதுமால் ஓடையில் கலக்கிறது. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் பிகேஸ்ஏ சாலை வாறுகால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

வாறுகாலை சிலர் ஆக்கிரமிப்பு ெசய்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். வாறுகால் முறையாக தூர் வாரப்படாததால் மண் மேவி வாறுகால் தூர்ந்து கிடந்தது. மழைக்காலங்களில் வாறுகால் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து இருந்தது. மாநராட்சி மேயர் சங்கீதா இன்பம் உத்தரவின் பேரில் பிகேஎஸ்ஏ சாலை வாறுகால் மண் மேடுகளை அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் வாறுகால் மண் மேடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதுவரை 150 லாரி லோடு மண் அகற்றப்பட்டுள்ளது. மணல் அகற்றும் பணியின் போது வாறுகால் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டது. இதனால் பிகேஎஸ்ஏ சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தூர்ந்து கிடந்த மண்ேமடுகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றியதற்கு அப்பகுதி பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: