×

சின்னமனூர் பகுதியில் நெல் நாற்றாங்கால் பணி தீவிரம்

சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்ப் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடிக்கு மேல் உள்ளது. இதனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், ஜூன் 1ம் தேதி தேனி மாவட்ட முதல் போக பாசனத்திற்காக, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கூட்டுறவுத்துறை ஐ.பெரியசாமி தண்ணீரை திறந்துவிட்டார்.

இந்நிலையில், சின்னமனூர் பகுதியில் உள்ள வேம்படிக்களம், கருங்கட்டான்குளம், பெருமாள் கோயில் பரவு, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் முதல்போக சாகுபடிக்காக நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25 நாட்களில் நாற்றுகள் வளர்ந்தவுடன் நடவுப் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Chinnamanur , Cinnamanur: Work is in progress to set up a paddy nursery in the Cinnamanur area.
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்