×

குத்தாலம் அருகே மங்கைநல்லூர் கேப்சூல் முறையில் நடவு பணி

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (51). இவர் எம்காம்., பிஎட்., டிசிஏ, டிசிபிஏ, பிஜிடி சிஎம், ஐசிடபிள்யூஏ, அக்ரிகல்சர் டிப்ளமோ உன்கிட்ட எண்ணிலடங்கா பட்டப்படிப்பு, பட்டய படிப்புகளை முடித்து இருந்தாலும் இவர் விரும்பி ஏற்றுக் கொண்டது விவசாய தொழிலை மட்டுமே. இவர் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். தனது வயலில் கருப்பு கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, கருங்குருவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துவரும் விவசாயி ராஜசேகர் ஒவ்வொருமுறையும் புதுமையான முயற்சிகளை பரீட்சார்த்த அடிப்படையில் செய்து வருகிறார். இந்த வருடம் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் அறுபதாம் குறுவை நெல் ரகத்தை கேப்ஸ்யூல் முறையில் இவர் நடவு செய்துள்ளார்.

 கடலை புண்ணாக்கு, இலுப்பை வேப்பம் புண்ணாக்கு, பிளான்ட் பிரோமோட்டிங் கிரானுல்ஸ் ஆகியவற்றை 3:1:1:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து உரமாக்கி கொண்ட விவசாயி ராஜசேகர் அதனை ஒரு காட்சியில் அடைத்து அதனுடன் மூன்று விதைகளையும் சேர்த்து வைத்து மூடி விடுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ நெல் விதை தேவைப்படும் நிலையில் இந்த கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும் இரண்டரை கிலோ விதைநெல் மட்டுமே போதுமானது என்றும், பொதுவாக 110-நாள் சாகுபடிக்கு தேவைப்படும் நிலையில் இந்த முறையில் நடவு செய்யும்போது 90-நாட்கள் மட்டுமே தேவைப்படும் என்கிறார் விவசாயி ராஜசேகர்.

Tags : Kuthalam , Kuthalam: Rajasekar (51) hails from Agraharat Street, Mangainallur, Kuthalam taluka, Mayiladuthurai district. He is an M.Com., B.Ed., DCA,
× RELATED சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி