சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள காவலர் சாமதுரைக்கு ஒருநாள் இடைக்கால ஜாமீன்..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள காவலர் சாமதுரைக்கு ஒருநாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜூன் மாதம் 19ம் தேதி தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விசாரணைக்காக அழைத்து சென்று அடித்தே கொன்ற கொடூரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என மொத்தம் 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள காவலர் சாமதுரைக்கு ஒருநாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. காவலர் சாமதுரைக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் நாளை மாலை 4 மணிவரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு காவலர் சாமதுரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கோரியிருந்தார்.

Related Stories: