என்ன இப்படியாகி போச்சு!: எல்.ஐ.சி.யின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தது.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!!

டெல்லி: எல்.ஐ.சி.யின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்திய பங்கு சந்தைக்குள் சமீபத்தில் எல்ஐசி நிறுவனம் காலடி வைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எல்.ஐ.சி. பங்குகள் கடந்த மே 17ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. இதற்கு பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். எல்.ஐ.சி. பிரியர்கள் இந்த நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்கக்கூடாது என வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் எல்.ஐ.சி. பங்குகளை சுப்ஸ்கிரைப் செய்யக்கூடிய சூழல் நிலவியது.

பெருவாரியான முதலீட்டாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு எல்.ஐ.சி.யின் ஐ.பி.ஓ.வை பதிவு செய்து பங்குகளை வாங்கினர். எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றைய தினமே கடுமையான சரிவுக்குள்ளானது. இதனால் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பங்கு வர்த்தகத்தில் எல்.ஐ.சி.யின் பங்குகள் விலை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில், எல்.ஐ.சி. சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. பங்குச்சந்தையில் இன்று ஒரேநாளில் எல்.ஐ.சி. பங்குகள் ரூ.14 வரை குறைந்ததால் ரூ.786.20க்கு விற்பனையாகி வருகிறது.

பங்கு ஒன்று ரூ.949 விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்.ஐ.சி. பங்கின் விலை ரூ.163 வரை சரிந்துள்ளது. இதன் மூலம் பங்கு ஒன்று ரூ.889 விலையில் வாங்கிய எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.103 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.யின் தற்போதைய மதிப்பு ரூ.4,97,113 கோடியாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரூ.5 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்திருப்பதால் பங்குகளை வாங்கியவர்களின் நிலை பரிதாபமாகியுள்ளது. 

Related Stories: