×

தூத்துக்குடியில் கோடை மழையினால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி மீண்டும் தொடக்கம்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோடை மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் முழு வீச்சில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து 9 மாதங்கள் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தொடர்ந்து கோடை மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் உப்பின் விலையும் இருமடங்கு உயர்ந்தது. தற்போது உப்பளங்களில் தேங்கி இருந்த மழைநீர் முழுமையாக வடிந்து விட்டதால் கடந்த 10 நாட்களாக உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை பெய்ததால் உப்பு உற்பத்தி மிகுந்த பாதிப்படைந்த நிலையில், தற்போது வெயில் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி மீண்டும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதனால் வருமானமும் அதிகரித்துள்ளது என கூறினார்.


Tags : tutukudi , Thoothukudi, summer rains, salt production, impact, start
× RELATED “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக்...