×

அஸம்கர் தொகுதி இடைத்தேர்தல் போஜ்புரி நடிகருக்கு பாஜ சீட்

லக்னோ, : அஸம்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், பாஜ சார்பில் போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிராகுவா போட்டியிடுகிறார். திரிபுரா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதுபோல், உத்தரபிரதேச மாநிலம் அஸம்கர், ராம்பூர் ஆகிய இரு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜ தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அஸம்கர் தொகுதியில் போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிராகுவாவும், ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்சி கன்ஷ்யாம் லோதியும் போட்டியிடுகின்றனர். மேற்கண்ட இரு தொகுதிகளின் எம்பியாக இருந்த அகிலேஷ் யாதவ், அசம்கான் ஆகியோர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால், தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட இரு வேட்பாளர்களும் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

Tags : Bajaj ,Azamgarh , Bajaj seat for Bhojpuri actor in Azamgarh constituency by-election
× RELATED திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3...