வாடா எம் மச்சி வாழக்கா பஜ்ஜி...அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா

பியோங்யாங்: ஒரே நாளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 8 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி வடகொரியா சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜப்பானில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குவாட் உச்சி மாநாடு நடந்தபோது, சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் ஜப்பான் கடல் பகுதியில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜப்பானும், அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. அடுத்த சில மணி நேரங்களில் வடகொரியா ஜப்பானை நோக்கி ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. இதனால், வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க போவதாக கடந்த வாரம் அமெரிக்கா எச்சரித்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான ரொனால்ட் ரீகன், தென் கொரியாவுடன்  பிலிப்பைன்ஸ் கடலில் மூன்று நாள் போர் பயிற்சி நடத்தியது. நேற்று முன்தினம் முடிந்தது. அதற்கு மறுநாளான நேற்றே, அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் ஒரே நாளில் 8 விதமான குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா சோதனை நடத்தி உள்ளது. வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சுனான் பகுதியில் இருந்து, 35  நிமிடங்களுக்கு அடுத்தடுத்து இந்த 8 ஏவுகணைகளும் வீசப்பட்டன. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. வட கொரியாவின் இச்செயலுக்கு அமெரிக்க வழக்கம் போல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் இதுவரை 18வது முறை வடகொரியா ஏவுகணைகளை சோதித்துள்ளது.

Related Stories: