×

ஆர்.கே.பேட்டை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது

பள்ளிப்பட்டு: கத்திரி வெயில் முடிந்தும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று மாலை ஆர்.கே.பேட்டை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.  வெயில் கொடுமை, அனல் காற்று,  புழுக்கத்தால் இரவில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில்  நேற்று மாலை  கொட்டிய மழைக்கு அனல் காற்று குறைந்து சில்லென்று காற்று வீசியது .அம்மையார்குப்பத்தில்  சூறைகாற்றுடன்  ஆலங்கட்டி மழைக்கு  இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தன. ஆலங்கட்டி மழையை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



Tags : RKpet , Hail fell in RKpet area
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...